இதுதான் மின்னல் வேகமா! – இவ்ளோ வேகமா வாகனத்தை முந்திச் சென்று என்ன செய்யப் போறீங்க?

high-speed chase before crashing into tree at Canberra Street
(PHOTO Screengrab: SG Road Vigilante)
சிங்கப்பூரின் பான் ஐலேண்ட் எக்ஸ்பிரஸ்வே (PIE) மற்றும் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்வே (CTE) வழியாக அதிவேகமாக வாகனத்தை ஓட்டிய குற்றத்திற்காக ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பிப்ரவரி 27, 2022 அன்று அதிகாலை 2 மணியளவில் மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் சாலையில் வாகனத்தை ஓட்டிச்சென்றதாக நவம்பர் 30 அன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
மணிக்கு 155 கிமீ வேகத்தில் வாகனத்தை இயக்கி மற்ற வாகனங்களை முந்திச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கேமராக்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குற்றவாளிகளை அடையாளம் கண்டதாக கூறினர்.
கடந்த மார்ச் மாதம் வழக்கில் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் 16 ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.அவர்களில் ஒன்பது பேர் மீது சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1961 பிரிவு 64(1)ன் கீழ் ஆபத்தான வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது போன்ற உயிருக்கு ஆபத்தான விதமாக சாலையில் வாகனத்தை ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக “கடுமையான அமலாக்க நடவடிக்கை” தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை மேலும் கூறியது.