கனமழையைத் தொடர்ந்து, வேன் மீது விழுந்த 7 மாடி உயர மரம்…

Photos: SingaporeLaughs/FB

சுமார் 18மீ உயரம் கொண்டதாக மதிப்பிடப்படும் மரம் ஒன்று, நேற்று (ஆக. 17) எமரால்டு ஹில் சாலையில் வேன் ஒன்றின் மீது விழுந்தது.

இந்த சம்பவத்தின் புகைப்படங்கள் பேஸ்புக்கில் பகிரப்பட்டன, அதில் வேனின் மேற்பகுதி நசுக்கப்பட்டு, கண்ணாடிகள் நொறுங்கி இருப்பதை காணமுடிகிறது.

“இந்தியர்களே நாடு திரும்புங்கள், கொரோனாவை பரப்பாதீர்கள்” என்று சாடிய ஆடவருக்கு கடுமையான எச்சரிக்கை

மரம் விழுந்த தாக்கத்தின் காரணமாக வேனின் மேற்பகுதி இடிந்தும், மையப்பகுதி வளைந்தும் காணப்படுகிறது.

விழுந்த அந்த மரத்தின் பகுதி, குறைந்தது ஒரு சில டன் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று மதியம் 12:20 மணியளவில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, 134 எமரால்டு ஹில் சாலையில் விழுந்த தஞ்சோங் மரம் குறித்து தகவல் கொடுக்கப்பட்டதாக NParks தெரிவித்துள்ளது.

சுமார் 15மீ முதல் 18மீ உயரம் வரை 2.8 மீ சுற்றளவு கொண்ட அந்த மரம் அன்று மாலை 4 மணிக்கு அப்புறப்படுத்தப்பட்டது.

இதில் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.