அதிக கிருமித்தொற்று ஆபத்துள்ள நாடுகளுக்கு புதிய கட்டுப்பாடு என்ன?

Roslan Rahman/AFP

அதிக கிருமித்தொற்று ஆபத்துள்ள நாடுகள், வகை IVல் சேர்க்கப்பட்டுள்ளன.

அதன்படி, வகை IVல் உள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகள், புறப்படும் 48 மணி நேரத்திற்குள் PCR சோதனை கண்டிப்பாக எடுக்க வேண்டும்.

அதே போல, சிங்கப்பூர் வந்தவுடன் பயணிகள் அனைவருக்கும் மற்றொரு PCR சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு

அவர்கள் 14 நாள்கள், பிரத்யேக தனிமைப்படுத்தப்பட்ட வசதியில் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்ற வேண்டும்.

வருகைக்கு பிறகு, தனிமையில் உள்ள 3, 7மற்றும் 11 ஆகிய நாட்களில் ART சுய பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

பின்னர், தனிமை உத்தரவு முடியும் 14ஆம் நாள் மீண்டும் PCR சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் 22 இரவு 11.59 மணி முதல், புதிய நடவடிக்கை நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, பங்களாதேஷ், மியான்மர், நேபால், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை.

இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு