ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு பெருகுகிறதா! – சிங்கப்பூரின் பழைய தலைமுறையினர் ஏற்க மறுக்கிறார்கள்

LGBTQ

சிங்கப்பூரில் ஓரினச்சேர்க்கையை குற்றம் என்று வகைபடுதப்பட்டுள்ள சட்டத்திற்கு பாதிக்கும் குறைவான சிங்கப்பூரர்களே ஆதரவு தெரிவிப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்தது.சந்தை ஆராய்ச்சி நிறுவனமான Ipsos-ஆல் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.

சட்டம் ஆண்களுக்கு இடையேயான உடலுறவைக் குற்றமாக வகைப் படுத்துகிறது.இருந்தாலும் அது முன்கூட்டியே செயல்படுத்தப் படவில்லை.
ஓரினச்சேர்க்கைக்கு எதிரான குற்றவியல் தண்டனைச் சட்டம் 377ஏ பிரிவை ஆதரிப்பவர்கள் 44% என்றும் சட்டத்தை எதிர்ப்பவர்கள் 20 விழுக்காடு என்றும் ஆய்வு வெளியிட்டது.

2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் 55% ஆகவும் எதிர்ப்போர் 12% ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.அதாவது ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது.ஓரினச் சேர்கை தொடர்பான மனப்போக்கில் மாற்றம் நிகழ்ந்து வருவதை அறிந்து கொள்ள முடிகிறது.

Ipsos நிறுவனத்தால் இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் 18 வயதுக்கு மேற்பட்ட 500 சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களிடம் ஓரினச்சேர்க்கை மீதான அணுகுமுறை பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது .

கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரே பாலின உறவுகளுக்கான ஆதரவுகள் மிகவும் பெருகி விட்டன என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.அதேசமயத்தில் சிங்கப்பூரர்களின் பழைய தலைமுறையினர் பெரும்பாலானோர் ஓரினச் சேர்க்கையை எதிர்க்கிறார்கள்.

சுமார் 35 விழுக்காட்டினர் வேலைவாய்ப்பு,கல்வி,வீட்டுவசதி,மற்றும் பொது இடங்களில் LGBTQ மக்களுக்கு எதிரான பாகுபாட்டைத் தடைசெய்யும் சட்டங்களை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர்