பரபரப்பான விரைவுச் சாலையில் வலம்வந்த குதிரை.. அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள்

horse spotted trotting along cars on BKE

புக்கிட் திமா விரைவுச் சாலையில் கடந்த ஜூலை 8 அன்று வலம்வந்த குதிரையை கண்டு வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

கேமராவில் பதிவாக அதன் வீடியோ காட்சிகள் Complaint Singapore என்னும் Facebook குழுவில் பயனர் ஒருவரால் பதிவேற்றப்பட்டது.

ஊழியர்களை ஏற்றி செல்லும் லாரி, 5 பைக்குகள் மோதி விபத்து: 5 பேர் மருத்துவமனையில்…

பரபரப்பான விரைவுச் சாலையில் வாகனங்கள் கடந்து செல்லும்போது, ​​சேணம் கட்டிய குதிரை வலம்வந்தது.

ஒரு காணொளியில் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் (LTA) அதிகாரி ஒருவர், அந்த குதிரையை டர்ஃப் கிளப் அவென்யூவை நோக்கி அழைத்துச் செல்வதைக் காண முடிந்தது.

ஆனால், அந்தக் குதிரை புக்கிட் திமா சாடில் கிளப்பைச் சேர்ந்தது என்று கூறப்பட்டுள்ளது.

புக்கிட் திமா சேடில் கிளப்புக்கு சொந்தமான குதிரை அந்த குதிரை லாயத்திற்கு வெளியே வந்து சாலைகளில் வலம்வந்ததாக சிங்கப்பூர் டர்ஃப் கிளப் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அதன் பின்னர் அது பத்திரமாக லாயத்திற்குத் திரும்பியதாகவும் அவர் சொன்னார்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூர் லாட்டரியில் எப்படியெல்லாம் வின் பன்றாங்க பாருங்க.. 4D டிராவில் வெற்றிபெற்ற நபர் – ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்