சிங்கப்பூரில் நிலவிய வறண்ட வானிலை – என்னம்மா வியர்க்குது டா சாமி !

east coast park

ஜூலை 17 இரவிலும், ஜூலை 18 அதிகாலையிலும் சிங்கப்பூரின் இரவு வெப்பநிலையானது 30 டிகிரி செல்சியஸைத் தொட்டது. அதிகபட்சமாக East Coast Parkwayயில் அதிகாலை 2:47 மணிக்கு 29.4°C வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. தீவு முழுவதும் வெப்பநிலை மாறுபாட்டின் அளவு குறைவாகவே இருந்தது, ஏனென்றால் அந்நேரத்தில் பதிவு செய்யப்பட்ட குறைந்த வெப்பநிலையே மத்திய சிங்கப்பூரின் நியூட்டனில் 27.9 ° C ஆக இருந்தது. தீவின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் அதிகப்படியான வெப்பநிலை பதிவாகியுள்ளது. தீவு முழுவதும் ஈரப்பதம் 79 முதல் 96 சதவீதம் வரை இருந்தது.

 

ஜூலை 2022 இன் இரண்டாம் பாதியின் முதல் சில நாட்களில் வெப்பமான சூழலை எதிர்பார்க்கலாம் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் (MSS) இரண்டு நாட்களுக்கு முன்பே கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. வளிமண்டலத்தில் வறண்ட காற்று நிலையாக இருப்பதே சிங்கப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் வறண்ட வானிலைக்கு காரணம் ஆகும்.

 

ஜூலை 2022 இன் முதல் பாதியில் அதிகபட்ச தினசரி வெப்பநிலையான 34.8 டிகிரி செல்சியஸ் ஜூலை 4 அன்று மெரினா பேரேஜில் பதிவானது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு வாரங்களில், சிங்கப்பூரின் பல பகுதிகளில் தினசரி இரவுநேர குறைந்தபட்ச வெப்பநிலை 27°Cக்கு மேல் பதிவாகியுள்ளது.