ஹௌகாங் அவென்யூ 4ல் தீ விபத்து: ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

hougang-ave-4-fire scdf
SCDF

சிங்கப்பூர்: பிளாக் 682 ஹௌகாங் அவென்யூ 4ல் உள்ள அடுக்குமாடி வீட்டில் நேற்று இரவு (ஜூலை 1) தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, குடியிருப்பாளர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இது குறித்து இன்று வெளியான ட்வீட்டில், வெள்ளிக்கிழமை இரவு சுமார் 9:50 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் தலைவலி கொடுக்கும் “மூட்டைப் பூச்சி” – தப்பிக்கும் எஸ்பிரிமெண்ட் சக்ஸஸ்!

அதாவது, ​​மூன்றாவது மாடியில் உள்ள வீட்டின் படுக்கை அறையில் தீ ஏற்பட்டதாகவும், அடர் கரும் புகை அங்கிருந்து வெளியேறியதாகவும் SCDF கூறியுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்டை வீடுகளில் இருந்த சுமார் 25 பேர் வெளியேற்றப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

அந்த வீட்டில் இருந்த ஒருவர் SCDF வீரர்கள் வரும் முன்னரே சுயமாக வெளியேறியதாகவும், பின்னர் அவர் SCDF மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டு சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூரில் கழிவு நீரிலிருந்து தயாரிக்கப்படும் “பீர்”.. வேற லெவல் டேஸ்ட்டாம் – குடிமகன்கள் நச்