ஹவ்காங் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து!

Photo: SCDF Official Facebook Page

சிங்கப்பூரில் பிளாக் 537 ஹவ்காங் தெரு 52- ல் (Fire @ Blk 537 Hougang Street 52) உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (24/11/2021) மாலை 05.45 PM மணிக்கு மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் மற்றும் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் பயணிகளின் கவனத்திற்கு!

இதையடுத்து, சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையின் செங்காங் தீயணைப்பு நிலையத்தின் தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்தனர். அப்போது, குடியிருப்பின் இரண்டாவது மாடியில் தீ கொளுந்து விட்டு எரிந்ததைப் பார்த்த செங்காங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் (Firefighters from Sengkang Fire Station), சுவாச கருவி செட்டை (wearing breathing apparatus sets) அணிந்துக் கொண்டு, இரண்டாவது மாடிக்கு சென்றனர். அதைத் தொடர்ந்து, தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்புக்குள் நுழைந்த வீரர்கள், சமையலறையில் தீ கொளுந்துவிட்டு எரிந்ததைக் கண்டறிந்து, அந்த அறை முழுவதும் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை முழுவதுமாக அணைத்தனர். இருப்பினும், அறையில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து தீக்கரையானது.

கடுமையான தீ மற்றும் புகையால் வீட்டில் உள்ள மற்ற அறைகளும் சேதமடைந்தது. சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினர் வருவதற்கு முன்பாகவே, அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்தில் இருந்து சுமார் 20 குடியிருப்பாளர்கள் தாங்களாகவே வெளியேறினர். அவர்களில் 5 குடியிருப்பாளர்கள் படிக்கட்டு வழியாக வெளியேறும் போது புகையை சுவாசித்துள்ளனர். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட, அவர்களை சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினர், சிங்கப்பூர் பொது மருத்துவமனை (Singapore General Hospital) மற்றும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு (National University Hospital for smoke inhalation) அனுப்பி வைத்தனர்.

சிங்கப்பூர்- மலேசியா நில வழி VTL பயணம்: தினமும் 3,000 பயணிகளுக்கு அனுமதி – டிக்கெட் விற்பனை

தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.