சிங்கப்பூர் PR வைத்திருப்பவர்கள், சிங்கப்பூர் குடிமகனாக என்ன செய்ய வேண்டும்?

singapore tourism

சிங்­கப்­பூர் குடி­ம­க­னாக விரும்­பும் நிரந்­த­ர­வா­சி­கள் அனை­வ­ரும் கட்­டா­யம் தேசிய சேவை­யாற்றி இருக்க வேண்­டும்.

திற­மை­யா­ன­வர்­க­ளுக்கு தேசிய சேவையை தள்­ளிப்­போ­டு­வதை எளி­தாக்க வேண்­டும் அல்­லது நிரந்­தர விலக்கு அளிக்க வேண்­டும் என்று நாடாளு­மன்ற உறுப்­பி­னர் லியோங் மன் வை கடந்த மாதம் ஃபேஸ்புக்­கில் பதி­விட்­டி­ருந்­தார்.

சிங்­கப்­பூ­ரில் பிறப்பு விகி­தம் குறை­வாக இருக்­கும் நிலை­யில், புதிய குடி­மக்­க­ளை­யும் நிரந்­த­ர­வாசி­க­ளை­யும் தேசிய சேவை­யில் சேர்க்­கா­தி­ருந்­தால் அது சிங்­கப்­பூர் ஆயு­தப்­ப­டை­யின் மனி­த­வ­ளத் தேவை­களில் கடும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி இருந்­தி­ருக்­கும்,” என்று நாடா­ளு­மன்­றத்­தில் டாக்­டர் இங் கூறி­னார்.

அத்­த­கைய தேசிய சேவை­யாளர்­களில் பாதிக்­கும் மேற்­பட்­டோர் புதிய குடி­மகன்கள் என்­றும் எஞ்சி­யோர் நிரந்­த­ர­வா­சி­கள் என்றும் அவர் சொன்­னார்.

சிங்­கப்­பூர் ஆயு­தப்­ப­டைக்­கும் நமது தேசிய தற்­காப்­புக்­கும் தேசிய சேவையே அடித்­த­ள­மாக விளங்கு­கிறது.

பிறப்பு, பதிவு அல்­லது வம்­சா­வளி எது­வாக இருப்­பி­னும், இளம் குடி­ம­கன்­கள் அனை­வ­ருக்­கும் தேசிய சேவை கட­மை­கள் ஒரே மாதி­ரி­யா­கவே இருக்­கும் என அமைச்­சர் இங் தெளி­வு­படுத்­தி­னார்.

ஒவ்­வோர் ஆண்­டி­லும் சரா­ச­ரி­யாக 3,400 புதிய குடி­ம­கன்­கள் தேசிய சேவை­யாற்­று­கின்­ற­னர் என்றார்.