உங்களுக்கான CDC பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதும், பயன்படுத்துவதும் எப்படி?- விரிவான தகவல்!

Photo: CDC Vouchers Scheme

சிங்கப்பூர் குடும்பங்கள் ஒவ்வொன்றும் இன்று (11/05/2022) முதல் 100 வெள்ளி மதிப்புள்ள சமூக மேம்பாட்டு பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் (Community Development Councils- ‘CDCs’) என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பற்றுச்சீட்டுகளைப் பெற 1.3 மில்லியன் சிங்கப்பூர் குடும்பங்கள் தகுதிப் பெற்றுள்ளனர். பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளும் முறையில் எந்த மாற்றமும் இல்லை.

சிங்கப்பூர் குடும்பங்களுக்கு மேலும் 100 வெள்ளி மதிப்புள்ள சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள்!

go.gov.sg/cdcv என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் 2022 என்பதைத் தேர்ந்தெடுத்து, சிங்பாஸ் கணக்குடன் உட்பதிவு செய்யுங்கள்! 2022- ஆம் ஆண்டின் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்ள, குறுந்தகவல் வழி புதிய இணைப்பு உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த இணைப்பை குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்து, பற்றுச்சீட்டுகளை அவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளலாம். 2021- ஆம் ஆண்டிற்கான பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமா? அல்லது உங்களுக்கான பற்றுச்சீட்டின் இணைப்பு காணாமல் போய்விட்டதா? கவலை வேண்டாம், நீங்கள் go.gov.sg/cdcv என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று, சிங்பாஸ் கணக்குடன் உட்பதிவு செய்து, பற்றுச்சீட்டின் இணைப்புகளை மீட்டெடுக்கலாம்.

திக்குமுக்காடச் செய்யும் கொக்கோ கோலாவின் புதிய சுவை பானம் – சிங்கப்பூரில் மே 16 முதல் விண்வெளி பானம் அறிமுகம்

இந்த பற்றுச்சீட்டுகளைப் பங்குபெறும் உணவங்காடிக் கடைகளிலும், குடியிருப்பு வட்டாரக் கடைகளிலும் பயன்படுத்தலாம். வணிகர்களையும் கண்டறிய go.gov.sg/cdcvouchersmerchants என்ற இணையதளப் பக்கத்தை நாடுங்கள். சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் அனைத்தும் 2022- ஆம் ஆண்டு டிசம்பர் 31- ஆம் தேதி காலாவதியாகிவிடும்.

உங்களுக்கான பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்ள உதவி தேவையா? உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட படிப்படியான வழிகாட்டியைப் பாருங்கள் (அல்லது) பற்றுச்சீட்டுகளை மின்னிலக்க முறையில் பெற்றுக் கொள்ள குடும்பத்தாரிடம் அல்லது நண்பர்களிடம் உதவிக் கேளுங்கள்.

மே 13- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை!

இதன்வழி, பற்றுச்சீட்டுகளை நீங்கள் உடனடியாகப் பயன்படுத்த தொடங்கலாம். அருகிலுள்ள சமூக நிலையத்திற்கு அல்லது மன்றத்திற்குச் செல்லுங்கள். பற்றுச்சீட்டுகள் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, 6225- 5322 என்ற தொலைபேசி எண் (அல்லது) vouchers.cdc.gov.sg என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.