சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்கொடை அளிக்கலாம் – எப்படி?

Donate Unopened CNY Snacks & Other Pre-Loved Items To Migrant Workers
(PHOTO: ItsRainingRaincoats / Facebook)

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை ஆதரிக்கும் உள்ளூர் சமூக அமைப்பான It’s Raining Raincoats, பயன்படுத்தாத மற்றும் காலவதி ஆகாத சீன புத்தாண்டு பிஸ்கட்டுகள் மற்றும் உணவு பொருட்களை நன்கொடையாக சேகரித்து வருகிறது.

சேகரிக்கப்பட்ட நன்கொடைகள், வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள், பணிநிலையங்கள் மற்றும் கட்டுமானப் பகுதிகளில் அமைப்பின் தன்னார்வலர்களால் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா செல்லும் அனைத்து சர்வதேச பயணிகளின் கவனத்திற்கு…!

It’s Raining Raincoatsஇன் இந்த நன்கொடை சேகரிப்பு முயற்சி வரும் பிப்ரவரி 28ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

நன்கொடை செய்வது எப்படி?

நன்கொடைகளை வாட்ஸ்அப் அல்லது செய்தி மூலமாக தீவு முழுவதும் அமைந்துள்ள அமைப்பின் தன்னார்வலர்களுக்கு தெரிவிக்கலாம்.

தன்னார்வலர்கள் மற்றும் தொலைபேசி எண்களின் முழு பட்டியல் இங்கே .

சீன புத்தாண்டு சிற்றுண்டிகள் மட்டுமல்லாமல், ஆண்களின் ஆடைகள், குடைகள், பேக்குகள் போன்ற பொருட்களையும் நன்கொடையாக அளிக்கலாம்.

சிங்கப்பூரில் S Pass ஒதுக்கீடு குறைப்பு… வேலை கிடைக்குமா என்று தமிழக இளைஞர்கள் அச்சம்

குறிப்பு:

மற்றவர்கள் பயன்பாட்டிற்காக நீங்கள் பொருட்களைக் கொடுக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நீங்கள் வழங்குவது பயன்படுத்தாத மற்றும் காலவதி ஆகாத உணவு என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலும் விருப்பப்பட்டு வழங்கும் பொருட்கள் சிறந்த நிலையில் இருக்கிறதா என்பதையும், நன்கொடைக்கு முன் கழுவி சுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

நல்லதை பகிர்வோம்.. நம்மால் பலர் மகிழ்ச்சி அடையட்டும்…

பிப். மற்றும் மார்ச் மாதங்களில் சிங்கப்பூர் to திருச்சி, சென்னை, மதுரை செல்ல விமானங்கள்!