இந்த ரயில்ல போனா நேரத்தை மிச்சப்படுத்தலாம்! – சிங்கப்பூர்-ஜோஹோர் இடையே அதிவேக விரைவு ரயில் திட்டம்

hsr malaysia pm ismail
கோலாலம்பூர்-சிங்கப்பூர் இடையே அதிவேக ரயில் (HSR) இயக்குவதற்கான திட்டம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை விரைவில் புதுப்பிக்க சிங்கப்பூருடன் மலேசியா விவாதித்து வருவதாக மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் ஆகஸ்ட் 22 திங்கள்கிழமை அன்று தெரிவித்தார்.

மலேசியாவின் போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் தனது சிங்கப்பூர் அமைச்சர் எஸ்.ஈஸ்வரனுடன் இது குறித்து கலந்தாலோசித்து வருவதாகக் கூறிய பிரதமர், இறுதியில் HSR திட்டம் புத்துயிர் பெற்றால் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம், என்று கூறினார்.
கோலாலம்பூருக்கும் பாங்காக்கிற்கும் இடையில் அதிவேக விரைவு ரயிலை இயக்க மலேசியா திட்டமிட்டிருப்பதால் முடிந்த வரை அத்திட்டத்தை விரைவுபடுத்த விரும்புவதாக தெரிவித்தார்.

ஜோஹோர்-சிங்கப்பூர் இடையேயான HSR இணைப்பின் முக்கியத்துவத்தை மலேசிய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக திங்களன்று இஸ்மாயில் கூறினார்.மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் 2016 டிசம்பரில் HSR திட்டத்தில் சட்டப்பூர்வமான இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

பின்னர் மலேசிய அரசாங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் திட்டத்தை சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு இடைநிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.ஒத்திவைப்பினால் ஏற்பட்ட செலவினங்களுக்காக சிங்கப்பூர் S$15 மில்லியன் சிங்கப்பூருக்கு மலேசியா திருப்பிச் செலுத்தியது.
சிங்கப்பூர் அந்தத் திட்டத்திற்காக சுமார் 270 மில்லியன் S$ செலவிட்டிருந்தது. சிங்கப்பூருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து மலேசியா சுமார் 102 மில்லியன் சிங்கப்பூர் டாலர்களை இழப்பீடாக செலுத்தியது.

கடந்த நவம்பர் 2021 இல், பிரதமர் லீ , மலேசிய பிரதமர் இஸ்மாயில் HSR ஐ புதுப்பிக்க பரிந்துரைத்ததாகவும் சிங்கப்பூர் புதிய திட்டங்களுக்குத் திறந்திருப்பதாகவும் தெரிவித்தார்.மே 2022 இல், சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் மலேசியா “சில புதிய யோசனைகளை” ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.