“கூனல் முதுகுடன் ஓயாது உழைக்கும் 64 வயதான ஊழியர்” – நடந்தே உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களின் ரோல் மாடல்!

hunchback-grabfood-delivery-singapore
Nazri Johari & Prolificskins

கிராப்ஃபுட் டெலிவரி செய்யும் ஊழியரின் சட்டை அணிந்த 64 வயதான ஊழியர் ஒருவர் சோவா சூ காங் பகுதியில் சுற்றி வருவதை நீங்கள் தொடர்ந்து காணலாம்.

அவர், தன் டெலிவரி தள்ளுவண்டியில் உணவுப் பையை வைத்து, கால் நடையாக உணவை விநியோகிப்பதை காணும் நமக்கு பிரம்மிப்பாக உள்ளது.

நீண்ட கால அனுமதி உடையோருக்கு VTP பயண அனுமதி அவசியம் இல்லை – அப்போ Work Permit அனுமதிக்கு?

இவரின் புகைப்படம் முதன்முதலாக ஜனவரி 2022ன் தொடக்கத்தில் வலைத்தளங்களில் வலம்வந்தது, அவரது கூன் முதுகுடன் அந்த வயதான ஊழியர் தொடர்ந்து வேலை செய்வதை பலர் வியந்து பாராட்டினர்.

தற்போது அந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் தீயாக பரவியதை அடுத்து, ஷின் மின் டெய்லி நியூஸ் நிருபர்கள் சோவா சூ காங்கில் உள்ள லாட் ஒன் மாலில் அவரைக் கண்டுபிடித்தனர்.

கடந்த பிப்ரவரி 15 அன்று சோவா சூ காங் MRT நிலையத்திற்கு வெளியே நின்ற வாங் என்ற அவரை நிருபர் பார்த்தார். டெலிவரி ஆர்டர் வரும் என அவர் அங்கு காத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதில் வியக்கும் விஷயம் என்னவென்றால், அவர் நடந்தோ அல்லது பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தியோ உணவு விநியோகம் செய்ய விரும்பினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் சில மாதங்களுக்கு முன்பு தான் உணவு விநியோகம் செய்யத் தொங்கினார் என்றும், அதற்கு முன்பு ரெட்ஹில் பகுதியில் 10 ஆண்டுகள் துப்புரவுத் ஊழியராக இருந்ததாக வாங் கூறியுள்ளார் என ஷின் மின் தெரிவித்தது.

“ஒரு டெலிவரி செய்ய ஒரு மணிநேரம் எடுத்துக்கொள்கிறேன், ஒரு நாளில் குறிப்பிட்ட ஆர்டர்களை முடிக்க முடியாத காரணத்தால் எனக்கு அடிக்கடி ஆர்டர்கள் வழங்கப்படாது” என்று வாங் கூறினார்.

இந்த தள்ளாத வயதிலும் தன்னம்பிக்கையுடன் உழைக்கு இந்த ஊழியர் உழைக்கும் வர்க்கத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு.

நான்கு நாடு/பகுதிகளுக்கான VTL சேவையை தொடங்க உள்ளது சிங்கப்பூர் – பிப். 22 முதல் VTP அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்!