ஹைதராபாத்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் பயணிகளுக்கான அதிரடி ஆஃபரை அறிவித்தது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்!

Photo: Singapore Airlines Official Facebook Page

 

 

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம், இந்தியாவின் சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, டெல்லி, மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி மற்றும் இணைப்பு விமான சேவையை வழங்கி வருகிறது.

சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி- அனுமதி வழங்கியது இந்தியா!

அந்த வகையில், ஹைதராபாத்தில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் பயணிகளுக்கு அதிரடி ஆஃபரை அறிவித்தது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் (Singapore Airlines Group). அதன்படி, ஹைதராபாத்தில் இருந்து சிங்கப்பூருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் செல்லும் பயணிகள், சிங்கப்பூர் யூனிவர்சல் ஸ்டூடியோஸ்- க்கு (Universal Studios Singapore) செல்லலாம். நுழைவுக் கட்டணம் முற்றிலும் இலவசம். எனினும், இந்த ஆஃபர் விதிமுறைகளுக்கு உட்பட்டது.

வரும் செப்டம்பர் 4- ஆம் தேதிக்குள் ஹைதராபாத்தில் சிங்கப்பூருக்கு செல்ல பயண டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த ஆஃபர் பொருந்தும். அதேபோல், வரும் அக்டோபர் 29- ஆம் தேதியில் இருந்து அடுத்தாண்டு மார்ச் மாதம் 31- ஆம் தேதி வரை ஹைதராபாத்தில் இருந்து சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு இச்சலுகை பொருந்தும். ஆனால். அந்த பயண டிக்கெட்டுகள் அனைத்தும் வரும் செப்டம்பர் 04- ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது.

பாஸ்போர்ட்டில் மாற்றம் செய்து சிங்கப்பூருக்கு செல்ல முயன்ற இளைஞர் கைது!

இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்தின் https://www.singaporeair.com/en_UK/in/home#/book/bookflight என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.