சோதனைச் சாவடிகள் வழியாக சிங்கப்பூருக்குள் லாரியில் கடத்தப்பட்ட நாய்கள் – கடத்தலின் பின்னணி என்ன?

singapore ICA

மே 9 அன்று உயிருள்ள 17 நாய்களை சோதனைச் சாவடிகள் வழியாக சிங்கப்பூருக்குள் கடத்த முயன்றதாகவும் அவற்றை கண்டுபிடித்து தடுப்பதாகவும் குடிவரவு மற்றும் சோதனைச்சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்தது.கடத்தல் லாரியின் தற்காலிக படுக்கைக்கு அடியில் நாய்கள் கண்டறியப்பட்டன. சிங்கப்பூருக்கு கான்கிரீட் பொருட்களை ஏற்றிச்சென்ற லாரி மலேசியாவில் பதிவு செய்யப்பட்டதாகும்.

சோதனைச் சாவடியில் உள்ள அதிகாரிகளால் லாரி மீண்டும் சோதனை செய்யப்பட்டது. லாரியின் தற்காலிக படுக்கைக்குக் கீழ் 17 நாய்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்த பிறகு அவர்களின் சந்தேகம் உறுதியானது. மேலும் மீட்கப்பட்ட நாய்களுக்கு ஏதேனும் நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளதா என்று தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

NParks-ன் விலங்குகள் தனிமைப்படுத்தல் மையத்தில் நாய்கள் தனிமைப்படுத்தப்படும் என்று ICA கூறியது. இது குறித்து விசாரணைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தது.8520 Vape Pods, 20 Binozyt பாட்டில்களும் லாரியில் கண்டுபிடிக்கப்பட்டன.

கடத்தல் குறித்த முழு விசாரணைக்காக மலேசிய லாரி ஓட்டுநரும் அவரது உதவியாளரும் NParks மற்றும் சுகாதார அறிவியல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். NParks-ன் அனுமதியோடு மட்டுமே சிங்கப்பூருக்குள் அனைத்து விலங்குகளையும் இறக்குமதி செய்ய முடியும் என்பதை ICA பொதுமக்களுக்கு நினைவூட்டியது.

சட்டவிரோதமாக நாட்டுக்குள் விலங்குகளை கடத்தும் போது விலங்குகளின் நல்வாழ்வு பாதிக்கப்படுவதோடு, நாட்டிற்கு விசித்திரமான நோய்களை அறிமுகப்படுத்தும் என்று ஆணையம் எச்சரித்தது. வாயில்லா ஜீவன்களை வாட்டி வதைக்காமல் பாதுகாப்பாக வளர்த்தால் நன்றியுடன் இருக்கும் என்பது மனிதர்களுக்கு என்றும் சிந்தையில் இருக்கட்டும்.