சிங்கப்பூர் பயணிகளுக்கு இனி அனைத்தையும் இலகுவாக்கும் “MyICA” ஆப்: Visit pass-களையும் நீட்டிக்கலாம்!

Photo: Singapore Immigration & Checkpoints Authority

சிங்கப்பூரில் நீங்கள் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் (ICA) மொபைல் செயலியான ‘MyICA’ வழியாக பாஸ்போர்ட் மற்றும் NRIC களுக்கு விண்ணப்பிக்க முடியும். இது இந்த ஆண்டுக்குள் நடப்புக்கு வரும்.

அதே போல, இந்த செயலியின் வழியாக பொதுமக்கள் தங்களின் வருகை அனுமதிச் சீட்டுகளையும் நீட்டிக்க முடியும் என்று உள்துறைக்கான இரண்டாவது அமைச்சர் ஜோசஃபின் தியோ வியாழக்கிழமை (மார்ச் 3) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

JUSTIN: இந்திய பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! – இந்தியாவின் அனைத்து நகரங்களில் இருந்தும் சிங்கப்பூருக்கு தனிமை இல்லா சேவை!

கூடுதலாக…

  • பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள்
  • நீண்ட கால வருகைக்கான அனுமதிச்சீட்டுகள் (Long-term visit passes)
  • மாணவர் அனுமதி (Student pass)

மேற்கண்ட ஆவணங்களும் விரைவில் டிஜிட்டல் முறையில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயல்முறைகளை end-to-end என்னும் முழுவதுமான டிஜிட்டல் சேவையாக மாறும் என்றும் அவர் கூறினார்

மேலும் “பயணத்தின் முக்கியமான ஆவணங்களை தொலைத்து விட்டோம் என நாம் இனி கவலைப்பட வேண்டியதில்லை.”

குறிப்பாக இது ICAவில் நாம் செலவிடும் நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது என்றும் அமைச்சர் ஜோசஃபின் தியோ கூறினார்.

மேற்கூரை பலகை தலையில் விழுந்து பெண்ணுக்கு ரத்தம் வழிந்தோடியது – நெட்டிசன்கள் அதிர்ச்சி