குடிவரவு ஆணையத்தின் அலுவலகத்திற்கு யாரும் வர வேண்டாம் – ICA திடீரென இணையத்தில் பதிவு !

Passport-free clearance
ICA Building

ICA வின் செயலாக்க சேவைகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டதில்  2 மணி நேரத்திற்கும் மேலாக தடைபட்டது, மேலும் ICA விற்கு வருபவர்கள் தங்கள் பயணங்களை ஒத்திவைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டனர். மேலும் இதனால் பாதிக்கப்பட்டவர்களை ICA தாமாக பின்தொடரும் என்றும் கூறியது.

ICA இன்று காலை சுமார் 10 மணியளவில் தங்கள் செயலாக்கத்தில் ஏற்பட்ட இடையூறு குறித்த செய்தியை சமூக ஊடகங்களில் பகிர்ந்தது. பின்னர் காலை 11 மணியளவில், செயலாக்கத்தில் ஏற்பட்ட இடையூறு சரி செய்யப்பட்டு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதாக அறிவித்தது, மேலும் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பும் கோரியுள்ளது. மேற்கொண்ட விசாரணையில் தான் மின்சாரம் துண்டிக்கப்பட்டதில் இந்த இடையூறு நிகழ்ந்துள்ளது உறுதி செய்யப்பட்டது என்றும் ICA கூறியுள்ளது.

பல நாட்டின் எல்லைகள் அடுத்தடுத்து திறக்கப்பட்டு வருவதையடுத்து, பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை தற்போது அதிகளவில் ICA கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் சிங்கப்பூர்-மலேசியா சோதனைச் சாவடிகளான உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் ஆகிய இடங்களில் ஜூன் மாதத்தின் பிற்பகுதியில் கடும் போக்குவரத்து எதிர்பார்க்கப்படுவதாக மலேசியாவிற்கான பயணிகளுக்கு ICA ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.