ICA சோதனைக்காக “SG Arrival Card” மின் சேவை மற்றும் மொபைல் செயலியின் பீட்டா வெர்ஷனை வெளியிட்டுள்ளது!

ICA To Trial Beta Version Of “SG Arrival Card” e-Service And Mobile Application With Selected Transport Operators (Photo : ICA)

ICA சோதனைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட போக்குவரத்து ஆபரேட்டர்களுக்கு “SG Arrival Card” மின் சேவை மற்றும் மொபைல் செயலியின் பீட்டா பதிப்பை வெளியிட்டுள்ளது.

இன்று (ஆகஸ்ட் 14) முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட போக்குவரத்து ஆபரேட்டர்கள் மூலமாக பயணிக்கும் வெளிநாட்டு விசிட்டர்ஸ் சிங்கப்பூருக்கு வருவதற்கு 14 நாட்கள் முன்னதாக மின்னணு வருகை அட்டையை (Electronic Arrival Card) சமர்ப்பிக்கலாம்.

சிங்கப்பூர் வந்தவுடன் குடியேற்ற அனுமதிக்கு (Immigration Clearance) மட்டுமே அவர்கள் பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டும். ஏனெனில், ICAவின் இமிகிரேஷன் அமைப்பில் ஏற்கனவே அவர்கள் சமர்ப்பித்த மின்னணு வருகை அட்டைகள் இருக்கும்.

இந்த தகவலை ICA தனது அதிகாரபூர்வ வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

SG Arrival Card