“வேலை தேடுவோரிடம் S$450 வரை கட்டணம்” – சட்டவிரோதமாக இயங்கிய வேலைவாய்ப்பு ஏஜென்சி: சிறை, அபராதம் விதிப்பு!

(Photo: Mothership)

சிங்கப்பூரில் முறையான உரிமம் இல்லாமல் வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தியதற்காக 44 வயது சிங்கப்பூர் ஆடவருக்கு நான்கு வார சிறைத்தண்டனையும் அதிகபட்சமாக S$80,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இங் சாய் ஹோக் என்பவர் இந்த குற்றத்திற்காக கடந்த பிப்ரவரி 9, அன்று மாநில நீதிமன்றங்களால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை தேவையில்லை!

பின்னர் தண்டனைக்கு எதிராக இங் மேல்முறையீடு செய்தார் என்று மனிதவள அமைச்சகம் (MOM) நேற்றைய டிசம்பர் 10, செய்திக்குறிப்பில் கூறியது.

அதனை அடுத்து அவரது மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

என்ன நடந்தது?

கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மற்றும் 2017ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு இடையில், JOBSINSG.COM என்ற வேலைவாய்ப்பு ஏஜென்சியை அவர் சட்டவிரோதமாக இயக்கியுள்ளார்.

இதனை அடுத்து MOM மேற்கொண்ட விசாரணையில், வேலை தேடுபவர்களுக்கான வேலை வாய்ப்பு விளம்பரங்களை இங் வெளியிட்டது தெரியவந்தது.

மேலும், இந்த விளம்பரங்கள் மூலம் வரும் வேலை தேடுபவர்கள், அவரை அணுகும்போது பிஸிக்கல் பயோடேட்டாவை மட்டுமே வாங்கிக்கொண்டு, ஒவ்வொரு வேலை தேடுபவரிடம் இருந்து S$450 வரை பணம் கேட்டுள்ளார்.

வேலை தேடுபவர்கள் முன்னரே பணம் செலுத்த வேண்டும் என்றும், அப்போது தான் சேவைகள் தொடரும் என்றும் இதில் கூறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, பிடிபட்ட அவருக்கு நான்கு வார சிறைத்தண்டனையும் அதிகபட்சமாக S$80,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேலைவாய்ப்பு நிறுவனங்களை நாட விரும்பும் நபர்கள் முதலில், அது சட்டத்திற்கு உட்பட்டதா என்ற தன்மையை சரிபார்க்குமாறு MOM அறிவுறுத்தியுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் சாங்கி விமான நிலையத்திற்கு மிக பெரிய போக்குவரத்து சந்தை “இந்தியா”