போலீஸ் அதிரடி சோதனை: பாதுகாப்பு நடவடிக்கைளை மீறிய 26 பேர் மீது விசாரணை

illegal-ktv-police-raid-bedok-ubi
SPF

Ubi Avenue 4 மற்றும் பெடோக் சாலையில் உள்ள உரிமம் இல்லாத 2 “கேடிவி-கான்செப்ட்” இடங்களை சிங்கப்பூர் போலீசார் சோதனை செய்தனர்.

இதில் கோவிட்-19 பாதுகாப்பு இடைவெளியை மீறியதற்காக 26 பேர் விசாரணையில் உள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

சொந்த நாட்டுக்கு செல்லவிருந்த அன்றைய தினமே விபத்தில் சிக்கி உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர்!

அவர்கள் 23 முதல் 64 வயதுக்குட்பட்ட 17 ஆண்கள் மற்றும் ஒன்பது பெண்கள் என்றும் கூறப்படுகிறது.

அதிகாரிகள் மேற்கொண்ட இரண்டு சோதனை சம்பவங்களில் பிடிபட்ட அனைத்து நபர்களும் கோவிட்-19 விதிமுறைகளை மீறியதற்காக விசாரிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

தண்டனை

சட்டவிரோத தொலைதூர சூதாட்டத்தில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் S$5,000 வரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு கட்டுப்படாத குற்றவாளிகளுக்கு ஆறு மாதங்கள் வரை சிறை, S$10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

உரிமம் இல்லாமல் பொது பொழுதுபோக்கு மற்றும் மதுபானங்களை வழங்கும் ஒவ்வொரு குற்றத்திற்கும் S$20,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

“வேலைல இருக்கணும்னா இத செய்”… 1 முதலாளிக்கு 5 வெளிநாட்டு ஊழியர்கள் பாதிப்பு – 100 முதலாளிகளுக்கு செக்!