சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட சாதனங்கள் விற்பனை: 17 பேர் கைது

illegal streaming devices 17 people arrested
SPF

சிங்கப்பூரில் நேரலை செட்-டாப் பாக்ஸ் சாதனங்கள் விற்பனைக்கு தடை இருந்தும் அதை விற்பனை செய்த 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 24 முதல் 61 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அதில் நான்கு பெண்களும் 13 ஆண்களும் அடங்குவர் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

போலீஸ் ரைடு வருவது குறித்து ஊழியர்களுக்கு தகவல் கொடுத்த இருவருக்கு அபாரதம்

அவர்கள் அனைவரும் சட்டவிரோத நேரலை சாதனங்களின் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக சிங்கப்பூர் காவல்துறை இன்று (அக் 7) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. .

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் செவ்வாயன்று சிம் லிம் சதுக்கத்தில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர், அப்போது 2,500 க்கும் மேற்பட்ட நேரலை சாதனங்களைக் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட அந்த நேரலை சாதனங்களின் மதிப்பு S$500,000 க்கும் அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்களுக்கு ஓய்வு நாள் கட்டாயம் – MOM அறிவிப்பு