ஊழியர்களின் சம்பளத்தில் கை வைக்கும் நிறுவனங்கள்! – இந்தப் போக்கு தொடர்ந்தால் இதுதான் இறுதி நிலை!

PC- HALIMA

நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக சவாலை எதிர்கொள்ளும்போது செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.அந்த சூழ்நிலைகளில் நிறுவனத்தின் கவனம் ஊழியர்களின் சம்பளத்திலும் தரநிலைகளிலும் திரும்பக் கூடும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் கூறினார்.

17-வது ஆசிய,பசிபிக் வட்டார தொழிலாளர் அமைப்பின் கூட்டத்தில் பேசிய அதிபர் இவ்வாறு கூறினார்.நிறுவனங்களின் இத்தகைய செயல்பாடுகள் நீண்டகாலம் நிலைத்திருக்காது.மேலும்,இது மிகப்பெரிய அழுத்தத்தை உருவாக்கும் என்று கூறினார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இந்தக் கூட்டம் நடைபெறும்.இதுபோன்ற பிரச்சினைகள் உருவாகாமல் தடுக்க நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட்டம் நடத்தப்படுகிறது.இதனால் ஊழியர்களின் சம்பள உயர்வு,பணியிடச் சூழலை மேம்படுத்துதல் போன்ற விவகாரங்கள் குறித்து தொழிலாளர் அமைப்பின் உறுப்பினர்களுடன் விவாதிக்க முடிகிறது என்றும் அதிபர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் மனிதவள அமைச்சர் டான் சி லெங் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் 33 ஆசிய பசிபிக் நாடுகளைச் சேர்ந்த 19 அமைச்சர்கள் உட்பட 500 பேராளர்கள் பங்கேற்கின்றனர்.கூட்டத்தில் திரு.டான் தொடக்கவுரை ஆற்றியது குறிப்பிடத்தக்கதாகும்.