சிங்கப்பூரில் டுரியன் பழத்தை சாப்பிட்டு மகிழ்ந்த கீதா கோபிநாத்!

Photo: Gita Gopinath Official Twitter Page

அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சர்வதேச நாணய நிதியம் (IMF), 190 நாடுகள் சேர்ந்த ஒரு நிதிக் கட்டுப்பாட்டு அமைப்பாகும். நிலையான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், உலகெங்கிலும் உள்ள வறுமையைக் குறைக்கவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் செயல்பட்டு வருகின்ற ஒரு அமைப்பாகும்.

“70 வயதான இந்தியரை காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

இந்த சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநராக கீதா கோபிநாத் பணியாற்றி வருகிறார். இவர் அமெரிக்க வாழ் இந்தியர் ஆவர். இந்தியாவின் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர். சிறந்த பொருளாதார நிபுணர் ஆவர்.

இந்த நிலையில், கீதா கோபிநாத் உத்யோக பயணமாக முதன் முறையாக சிங்கப்பூர் வந்துள்ளார். சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூர் நிதி ஆணையத்தின் தலைமை நிர்வாகி (Monetary Authority of Singapore) ரவி மேனன் ஆகியோரைத் தனித்தனியே சந்தித்துப் பேசினார்.

ட்விட்டர் நிறுவனத்தைவிட்டு வெளியேறும் ஊழியர்கள்…!

அதைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் உள்ள உணவகத்திற்கு எளிமையாக சென்ற கீதா கோபிநாத், சிங்கப்பூரின் டுரியன் பழத்தைச் சாப்பிட்டு, தனது அனுபவத்தை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “டுரியன் பழத்தின் (Durian Fruit) சுவை சற்று வித்தியாசமாக இருந்தது. பலாப்பழம், அவகாடோ பழம் (Avocado) இரண்டும் கலந்த சுவை போன்று இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.