சாங்கி விமான நிலையத்தில் இனி புதிய சோதனை: வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் கவனத்திற்கு!

increased-screenings-enhancement-measure changi airport
Pic: AFP

சாங்கி விமான நிலையம் உள்ளிட்ட அனைத்து வித சோதனைச் சாவடிகளிலும் இனி மின் சிகரெட்டுக்கு எதிரான சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

மின் சிகரெட்டுக்கு எதிரான புதிய மேம்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சகம் (MOH) மற்றும் பிற அரசாங்க அமைப்புகள் கூட்டாக அறிவித்தன.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் 3 மணிநேரம் முன்னதாகவே உடைமைகளை வைக்க சிறப்பு அம்சம்

இந்த புதிய நடவடிக்கைகளில் விற்பனை மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்துதல், ஆன்லைனில் விற்பனை மற்றும் விளம்பரங்களைக் கண்டறிந்து அகற்றுதல் மற்றும் சமூகத்தில் கல்வியை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

சாங்கி விமான நிலையத்திலிருந்து தொடங்கி அனைத்து வித சோதனைச் சாவடிகளிலும், உள்வரும் பயணிகள் மின்-சிகரெட் அல்லது அவற்றின் பாகங்கள் ஏதேனும் வைத்துள்ளனரா என சோதிக்கப்படுவர்.

மின்-சிகரெட் அல்லது அவற்றின் பாகங்கள் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்.

பள்ளிகள் உட்பட அனைத்து பொது இடங்களிலும் கூடுதல் சோதனை மேற்கொள்ளப்படும்.

சிங்கப்பூரில் ​​மின் சிகரெட்டுகள் பயன்படுத்துவது சட்டவிரோதமானது.

மேலும், புகையிலை (விளம்பரங்கள் மற்றும் விற்பனை கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ், மின் சிகரெட்டுகளை வைத்திருப்பது, பயன்படுத்துவது அல்லது வாங்குவது ஆகியவற்றுக்கு அதிகபட்சமாக S$2,000 அபராதம் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூர் டோட்டோ (Toto) டிரா: முதல் பரிசுத் தொகை S$10 மில்லியன் – வெற்றி பெற கடும் போட்டி