‘இந்தியா, சிங்கப்பூர் இடையேயான விமான சேவை’- டிக்கெட் முன்பதிவைத் தொடங்கியது ‘சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்’ நிறுவனம்!

Photo: Singapore Airlines Official Facebook Page

சிங்கப்பூர் அரசின் கொரோனா தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திக் கொண்டவர்களுக்கான சிறப்பு பயணத் திட்டத்தின் (Vaccinated Travel Lane- ‘VTL’) கீழ் சிங்கப்பூர், இந்தியா இடையேயான விமான சேவை வரும் நவம்பர் 29- ஆம் தேதி தொடங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சிங்கப்பூர் சுகாதாரத்துறையின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

‘திருச்சி, சிங்கப்பூர் இடையே விமான சேவை’- அறிவிப்பை வெளியிட்டது ‘FlyScoot’ நிறுவனம்!

இந்த நிலையில், இந்தியாவின் முக்கிய வர்த்தக நகரங்களான சென்னை, டெல்லி மற்றும் மும்பை ஆகிய மூன்று நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் நவம்பர் 29- ஆம் தேதி முதல் தினசரி விமானங்கள் இயக்கப்படும் என்றும், ஒவ்வொரு நகரங்களில் இருந்து தலா இரண்டு விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines) விமான நிறுவனம் நேற்று (23/11/2021) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்களுக்கான சிறப்பு பயணத் திட்டத்தின் கீழ் இந்தியாவின் சென்னை, டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கு தினசரி விமான சேவையானது வரும் நவம்பர் 29- ஆம் தேதி முதல் தொடங்கப்படும். இந்த விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. பயண அட்டவணை, பயண விவரங்கள் உள்ளிட்ட தகவல்களுக்கு https://www.singaporeair.com/en_UK/sg/home#/book/bookflight என்ற இணையதளத்தை அணுகலாம்.

சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சருடன் மலேசிய நாட்டு கடற்படை தளபதி சந்திப்பு!

அதேபோல், அகமதாபாத், ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா மற்றும் கொச்சி ஆகிய ஐந்து நகரங்களுக்கு ‘Non- VTL’ விமானங்கள் இயக்கப்படும். இந்த நகரங்களுக்கான விமானச் சேவை வரும் நவம்பர் 29- ஆம் தேதி தொடங்கப்படும். இந்த விமான சேவையில் சிங்கப்பூர் வரும் பயணிகள், சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ள தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டும். Non- VTL விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கியுள்ளது.” இவ்வாறு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 மாதங்களுக்கு பிறகு இந்தியாவிற்கு மீண்டும் விமான சேவைத் தொடங்குவதையொட்டி, பயண டிக்கெட்டில் 50% வரை தள்ளுபடியையும் அறிவித்துள்ளது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம். இரு மார்க்கத்திலும் பயணம் செய்யும் பயணிகளுக்கும், அத்துடன் குறிப்பிட்ட தேதிக்குள் பயணிக்கும் பயணிகளுக்கும் இச்சலுகை பொருந்தும். என்று தகவல் கூறுகின்றன.