சிறப்பு விமானங்கள் மட்டுமே இந்தியா-சிங்கப்பூர் இடையில் இயக்கப்படுகின்றன – ஒவ்வொரு நாளும் 25 பயணிகள் சிங்கப்பூர் வருகை

India-Singapore flights
(Photo: Reuters)

இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு ஒவ்வொரு நாளும் சுமார் 25 பயணிகள் வருகை தருகின்றனர்.

அதில் பெரும்பாலான பயணிகள் சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தரவாசிகள், என மூன்று அமைச்சகங்கள் கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளன.

தற்போது சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையில் இயக்கப்படும் பயணிகள் விமானங்கள், இந்திய அரசாங்கத்தால் இயக்கப்படும் “வந்தே பாரத்” விமானங்கள் ஆகும்.

மேலும், அது இந்திய குடிமக்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து வருவதற்காக இயக்கப்படும் சிறப்பு விமானம் என்றும் போக்குவரத்து அமைச்சகம் (MOT), வெளியுறவு அமைச்சகம் (MFA) மற்றும் மனிதவள அமைச்சகம் (MOM) ஆகியவை தெரிவித்துள்ளன.

இருநாடுகளும் இடையில் இந்த விமான சேவை மட்டும் இருப்பதால், சிங்கப்பூருக்குத் திரும்ப வேண்டிய நபர்கள் அதில் பயணிக்க, இந்திய அரசாங்கம் அனுமதி வழங்குகிறது.

வந்தே பாரத் என்பது இந்திய அரசாங்கத்தால் இயக்கப்படும், உலகெங்கிலும் உள்ள இந்திய நாட்டினரை மீட்கும் சிறப்பு திட்டமாகும்.

ஒவ்வொரு நாளும், இந்தியாவுக்கு திரும்பிச் செல்லும் விமானங்களில் சராசரியாக சுமார் 180 பயணிகளும், அதே போல சிங்கப்பூருக்கு 25 பயணிகளும் வருகின்றனர்.