இந்தியாவின் எந்தெந்த நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவையை வழங்குகிறது ‘ஸ்கூட்’ நிறுவனம்?- விரிவான தகவல்!

பயணப்பைகளை எடுத்துவர முடியாமல் தவித்த ஸ்கூட் பயணிகள்: இந்தியாவில் தரையிறங்கியது - கடும் வெப்பம் தான் காரணம்
Photo: FlyScoot

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமானது ஸ்கூட் நிறுவனம் (Flyscoot). இந்நிறுவனம், சிங்கப்பூர், இந்தியா, தாய்லாந்து, மலேசியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தொடர்ந்து விமான சேவையை வழங்கி வருகிறது. மிகக் குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்கி வருகிறது.

குறைந்த சம்பளம் பெறும் வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளும் 3 முக்கிய பிரச்சனைகள் – அதற்கான தீர்வுகள்!

குறிப்பாக, இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு தொடர்ந்து விமான சேவையை ‘ஸ்கூட்’ நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்தியாவின் எந்தெந்த நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு ‘ஸ்கூட்’ நிறுவனம் விமான சேவையை வழங்குகிறது? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!

இந்தியாவின் திருச்சி, கோவை, அமிர்தசரஸ், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் ‘ஸ்கூட்’ நிறுவனம் விமான சேவையை வழங்கி வருகிறது.

இதில் குறிப்பாக, திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையேயான விமான சேவையை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இலங்கை நாட்டவர் உட்பட இரு வெளிநாட்டவர் மீது தாக்குதல் நடத்திய இருவருக்கு சிறை

பயண அட்டவணை மற்றும் விமான பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en/ என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.