இந்தியாவின் எந்தெந்த நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு ஸ்கூட் நிறுவனம் விமான சேவையை வழங்கி வருகிறது?- விரிவான தகவல்!

scoot-flight-diverted
Photo:Facebook/flyscoot

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ஸ்கூட் நிறுவனம் (Flyscoot), இந்தியாவின் எந்தெந்த நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பிய லாலு பிரசாத் யாதவ்!

அதன்படி, இந்தியாவின் திருச்சி, கோவை, விசாகப்பட்டினம், ஹைதராபாத், திருவனந்தபுரம், அமிர்தசரஸ் ஆகிய ஆறு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு தொடர்ந்து இரு மார்க்கத்திலும் ஸ்கூட் நிறுவனம் விமான சேவைகளை வழங்கி வருகிறது. இதில் அமிர்தசரஸ் தவிர மற்ற நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு A320 என்ற விமானத்தை விமான நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. இந்த விமானத்தில் 236 இருக்கைகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

’15 வயது சீன பெண்ணை காணவில்லை’- தகவல் கொடுக்குமாறு பொதுமக்களுக்கு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

விமான பயண அட்டவணை, விமான பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en என்ற ஸ்கூட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.