நேபாளம், பூடான், சிங்கப்பூருக்கு விலக்கு அளித்த இந்தியா!

சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி- அனுமதி வழங்கியது இந்தியா!
Photo: Rice

 

அரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டாலும் ஏழை நாடுகளுக்கும், அண்டை நாடுகளுக்கும் உணவுப் பாதுகாப்பற்ற விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் சந்தோஷ் குமார் சாரங்கித் தெரிவித்துள்ளார்.

எந்த மதத்தையும் சாராத பெரும்பாலான சிங்கப்பூரர்கள் கடவுள் இருப்பதாக நம்புகின்றனர் – ஆய்வு

நேபாளம், பூடானுக்கு கோதுமையும், செனகல், இந்தோனேசியா, காம்பியா, மாலி ஆகிய நாடுகளுக்கு குருணை அரிசியும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் சந்தோஷ் குமார் சாரங்கி குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், பூடான், மொரிசீயஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதிச் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் ‘உடல்மொழி உன்னதம்’ தலைப்பில் உரையாற்றுகிறார் வெ.இறையன்பு!

உள்நாட்டில் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் அரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்திருக்கிறது. இந்திய அரசு விதித்த தடையால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.