அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!

Photo: Minister Vivian Balakrishnan Official Facebook Page

சிங்கப்பூரில் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், சிங்கப்பூர் போக்குவரத்துத்துறை எஸ்.ஈஸ்வரன், உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சண்முகம், மூத்த அமைச்சர் மற்றும் சமூக ஒருங்கிணைப்புகளுக்கான அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம், பாதுகாப்புத்துறை அமைச்சர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களை தனித்தனியே சந்தித்துப் பேசினார்.

சிங்கப்பூரில் மேலும் 2,038 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று!

அதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பு குறித்து அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “ப்ளூம்பெர்க் புதிய பொருளாதார மன்றத்திற்காக சிங்கப்பூர் வந்திருக்கும் எனது நல்ல நண்பரும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான டாக்டர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்ததில் மகிழ்ச்சி. சிங்கப்பூருக்கும், இந்தியாவுக்கும் இடையிலான சிறந்த உறவை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தினோம், மேலும் பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து விவாதித்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூர்-மலேசியா இடையே நில வழி பயணம்: குடும்பங்களைப் பிரிந்து வாடும் ஊழியர்களுக்கு முன்னுரிமை!

சிங்கப்பூர் அமைச்சர்களுடனான சந்திப்பின் போது, கொரோனா பரவல், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள், பொருளாதாரம், இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துதல், பொருளாதாரம், சிங்கப்பூர்- இந்தியா விமான சேவை உள்ளிட்டவைக் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தியதாக தகவல் கூறுகின்றன.