‘இந்தியாவின் 5 நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவை’- அதிரடி அறிவிப்பை வெளியிட்டது ஸ்கூட் ஏர்லைன்ஸ்!

scoot-flight-diverted
Photo:Facebook/flyscoot

சிங்கப்பூரில் மிகவும் மலிவான கட்டணத்தில் விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது ஸ்கூட் விமான நிறுவனம். அந்த வகையில், இந்தியாவில் பல்வேறு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் தொடர்ந்து விமானங்களை இயக்கி வரும் ஸ்கூட் ஏர்லைன்ஸ் (Scoot Airlines) நிறுவனம், முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை’- மார்ச் மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

அந்த அறிவிப்பில், இந்தியாவின் கோயம்புத்தூர், திருவனந்தபுரம், அமிர்தசரஸ், திருச்சி, விசாகப்பட்டினம் ஆகிய ஐந்து நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு மிக குறைந்த கட்டணத்தில் விமானங்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, திருவனந்தபுரத்தில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல விமான பயண கட்டணம் ரூபாய் 5,500 மட்டுமே. அதேபோல், அமிர்தசரஸில் இருந்து சிங்கப்பூருக்கு ரூபாய் 6,000 கட்டணத்திலும், கோயம்புத்தூரில் இருந்து சிங்கப்பூருக்கு ரூபாய் 6,000 கட்டணத்திலும், திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு ரூபாய் 6,000 கட்டணத்திலும், விசாகப்பட்டினத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ரூபாய் 5,500 கட்டணத்திலும் செல்லலாம். இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இச்சலுகை ஜனவரி 20- ஆம் தேதி முதல் பிப்ரவரி 7- ஆம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு பொருந்தும். அதேபோல், இச்சலுகையின் மூலம் வரும் மார்ச் மாதம் 26- ஆம் தேதி வரை பயணிக்கலாம். இந்த சேவை Non-VTL விமான சேவை ஆகும். விமான பயண டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en/ என்ற இணையதள பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியருக்கு மரணம் ஏற்படுத்திய நிறுவனம், மேலாளர் மீது குற்றச்சாட்டு

அதேபோல், சிங்கப்பூரில் இருந்து இந்தியாவின் கோயம்புத்தூர், அமிர்தசரஸ், திருச்சி, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களுக்கு ஸ்கூட் ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம் குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பால் பயணிகள் இன்பதிர்ச்சி அடைந்தனர். மேலும், டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பு அடைந்துள்ளதாக தகவல் கூறுகின்றன.