இந்தியாவில் சர்வதேச விமான சேவைகள் எப்போது தொடங்கப்படும்.? – புதிய தகவல்.!

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020 மார்ச் 23ம் தேதி முதல் சர்வதேச விமானச் சேவை இயக்கப்படுவதில்லை. இம்மாதம் பிப்ரவரி 28ம் தேதி வரை வழக்கமான அனைத்துலக விமான சேவைகளை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருதரப்பு சிறப்பு ஏற்பாடுகள் மூலம் கடந்த 2020 ஜூலை மாதத்திலிருந்து இந்தியாவிற்கும் 40 நாடுகளுக்கும் இடையே  சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, அடுத்த மாதம் முதல் வழக்கமான அனைத்துலக விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரில் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு: புதிதாக 26,032 பேருக்கு தொற்றுநோய் உறுதி

இந்தியாவில் வழக்கமான அனைத்துலகத் விமானச சேவைகள் மார்ச் 15 முதல் தொடங்கப்படலாம் என்றும், அதே வேளையில், வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருபவர்களுக்கான இந்திய விமான நிலையங்களில் பின்பற்றப்படும் வழிகாட்டி நெறிமுறைகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என அரசாங்கத் தகவல்கள் கூறுவதாக NTTV நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான சுகாதார அமைச்சின் திருத்தப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் இம்மாதம் 14 முதல் நடப்பிற்கு வந்தது. 7 நாட்கள் கட்டாயமாக வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வது, 8வது நாளில் PCR பரிசோதனைக்கு உட்பட வேண்டியது உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டடது.

வெளிநாட்டு பயணிகள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னர், 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR பரிசோதனை செய்துகொண்டு, தொற்று இல்லை என சான்று பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும் அல்லது முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை அவர்கள் பதிவேற்றம் செய்யலாம்.

ரஷ்யாவின் முடிவு குறித்து சிங்கப்பூர் ஆழ்ந்த கவலை!