சிங்கப்பூர் கல்வி அமைச்சரைச் சந்தித்த இந்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

சிங்கப்பூர் கல்வி அமைச்சரைச் சந்தித்த இந்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!
Photo: India Minister Dharmendra Pradhan

 

 

மூன்று அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் வந்துள்ள இந்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் (Minister of Education and Skills Development and Entrepreneurship Dharmendra Pradhan), இன்று (மே 31) காலை 10.00 மணியளவில் சிங்கப்பூர் கல்வித்துறை அமைச்சர் சான் சுன் சிங்-கை, அவரது அலுவலகத்தில் இந்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, சிங்கப்பூருக்கான இந்திய தூதர் பெரியசாமி குமரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

“இந்தியாவில் மூன்று திறன் பயிற்சி மையங்களை நிறுவியுள்ளது சிங்கப்பூர்”- அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தகவல்!

அப்போது, இந்தியா- சிங்கப்பூர் இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, கல்வி மற்றும் திறன் மேம்பாடு துறைகள் குறித்தும், புதிய தொழில்நுட்பம், பள்ளி, கல்லூரிகளில் அதிநவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர்.

Photo: India Minister Dharmendra Pradhan

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் நடைபெறவுள்ள ஜி20 கல்வி அமைச்சர்கள் கூட்டத்திற்கு சிங்கப்பூர் தூதுக்குழுவை வரவேற்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம் என்று இந்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் S$18,888 அதிஷ்ட பரிசுத் தொகையை தட்டிச்சென்ற தமிழக ஊழியர்!

அத்துடன், இந்திய அமைச்சருக்கு, சிங்கப்பூர் கல்வித்துறை அமைச்சர் சான் சுன் சிங், நினைவுப் பரிசு வழங்கினார்.