சிங்கப்பூர் அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் சந்திப்பு!

Photo: Minister V. Muraleedharan Official Twitter Page

அரசுமுறைப் பயணமாக, சிங்கப்பூர் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன், பிப்ரவரி 20- ஆம் தேதி அன்று காலை சிங்கப்பூர் பிரதமர் அலுவலகத்துறை அமைச்சர், சிங்கப்பூர் கல்வி மற்றும் வெளியுறவுத்துறைக்கான இரண்டாவது அமைச்சர் டாக்டர். மாலிகி பின் ஒஸ்மானை (Dr.Maliki Bin Osman) நேரில் சந்தித்துப் பேசினார்.

போலி ATM கார்டுகளை தயாரித்து, அதனை பணம் எடுக்க பயன்படுத்திய நபர் கைது

இந்தியா- சிங்கப்பூர் இடையேயான இருதரப்பு உறவுகள் மற்றும் சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் நலன், பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினர். இந்த சந்திப்பின் போது, சிங்கப்பூருக்கான இந்திய தூதர் குமரன் பெரியசாமி மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

“6 மாதங்கள் வரை வேலை இல்லை” – பட்டதாரி ஊழியர்களுக்கு ஏற்பட்ட சோதனை

இந்திய அமைச்சர், இந்திய தூதர் உள்ளிட்டோருக்கு சிங்கப்பூர் அமைச்சர் தேநீர் விருந்தளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.