திரு. தர்மனை “புதிய பிரதமர்” என்றும், பிரதமர் திரு. லீயை “பதவியை துறக்கப்போகும் பிரதமர்” என்றும் தவறாக செய்தி வெளியிட்ட இந்திய செய்தி நிறுவனம்

India news channel wrongly announces g20
India Today

பிரதமர் திரு. லீ, ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்றிருந்தார்.

இந்நிலையில், ​​இந்தியாவில் உள்ள ஒரு செய்தி நிறுவனம் வெளியிட்ட தவறான செய்தி வலைத்தளத்தில் கேலிகிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

சிங்கப்பூரில் புதிய வெளிநாட்டு ஊழியர்கள் அனுமதிக்கு இவை முக்கியம்: செப்.19 முதல் கட்டாயம் – மீறினால் வேலை அனுமதிச் சலுகைகள் ரத்து

பிரதமர் லீ சியன் லூங்கை “பதவியை துறக்கப்போகும்” பிரதமர் என்றும், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மன் சண்முகரத்தினத்தை “புதிய பிரதமர்” என்றும் அந்த செய்தி நிறுவனம் தவறாக செய்தி வெளியிட்டது.

PM being introduced at the G20 by India Today channel.
byu/tileblues insingapore

இந்தியா டுடே டிவி கடந்த செப். 9 அன்று யூடியூப்பில் வெளியிட்ட ஜி20 மாநாட்டின் நேரடி காட்சிகளின் போது இந்த குழப்பம் ஏற்பட்டது.

அந்த தவறான அறிவிப்பின் போது, பிரதமர் லீ சிவப்பு கம்பளத்தில் நடந்து சென்று, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

இந்நிலையில், இது கேலிகிண்டலுக்கு ஆளாகி வருகிறது. “இது மிகவும் வேடிக்கையாக உள்ளது… இந்த தகவலை எங்கிருந்து பெற்றீர்கள்?” என்று ஒருவர் கமெண்ட் செய்தார்.

மற்றொருவர்: “உண்மையில் இது நிபுணத்துவம் பெறாத மற்றும் படிக்காத வேலையாட்களை கொண்ட இந்திய பத்திரிகை. ஏன் அவர்களால் உண்மை செய்திகளை சரியாகப் பெற முடியவில்லை?” என கமெண்ட் செய்தார்.

சிங்கப்பூரில் வேலை.. உணவு, போக்குவரத்துக்காக நாள் ஒன்றுக்கு S$13 மட்டும் செலவிடும் வெளிநாட்டு ஊழியர்