நெதர்லாந்து, பிரேசில், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி உயர்வு!

Singapore's exports fall 8.9% in August
File Photo

இந்தியாவில் இருந்து அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சீனா உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கான ஏற்றுமதி விகிதம் கடும் வீழ்ச்சிக் கண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த அக்டோபர் மாதத்தில் சரக்கு ஏற்றுமதி சரிந்துள்ளது ரூபாயின் மதிப்பில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

11 வயது சிறுவன் மீது மோதிய சிவப்பு நிற கார்! – முகத்தில் ரத்தத்துடன் சாலையில் கிடந்த பரிதாபம்;கூச்சலிட்ட சிறுவனுக்கு கிடைத்த உதவி!

இந்தியாவில் இருந்து அதிகம் பொருட்கள் ஏற்றுமதி ஆகும் நாடுகளின் முதல் 10 இடங்களில் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, சீனா, சிங்கப்பூர், வங்கதேசம், பிரிட்டன், பிரேசில், சவூதி அரேபியா, ஹாங்காங் ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில், இந்த 10 நாடுகளும் 47% பங்கை கொண்டுள்ளன. ஆனால் இந்த 10 நாடுகளில் 7 நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களின் வீதம், கடந்த அக்டோபர் மாதம் சரிந்துவிட்டதாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரத்தில், இறக்குமதி விகிதம் கணிசமாக அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மட்டும், கடந்த மாதம் வழக்கமான அளவை விட 25.6 விழுக்காடு குறைந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா உடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஐக்கிய அரபு அமீரகம் உடனான ஏற்றுமதியில் 18% சரிவைச் சந்தித்துள்ளது. சீனா உடனான ஏற்றுமதி, 47.5 சதவீதமும், அதிகபட்சமாக வங்கதேசத்துக்கான ஏற்றுமதி 52.5 சதவீதமும் வீழ்ச்சிக் கண்டுள்ளது.

சிங்கப்பூரில் சிறைத்தண்டனை பெற்ற இந்தியர்! – ATM கார்டுகளைப் பயன்படுத்தி மோசடி செயல்!

பிரிட்டன், சவூதி அரேபியா, ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதியும், கடந்த அக்டோபர் மாதத்தில் 20%- க்கும் மேல் சரிவைச் சந்தித்து இருக்கிறது. இந்தியாவில் சரக்கு ஏற்றுமதியில் 20 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி இது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஆறுதல் தரும் தகவலாக நெதர்லாந்து, சிங்கப்பூர், பிரேசில் ஆகிய நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி மட்டுமே உயர்ந்துள்ளது.

நெதர்லாந்துக்கு 21.6%, சிங்கப்பூருக்கு 24.8%, பிரேசிலுக்கு 57.7% அதிகமாகவும், இந்தியா சரக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. சரக்கு ஏற்றுமதி விகிதம் தொடர்ந்து சரிவதும், இறக்குமதி உயர்வதும் இந்திய ரூபாயின் மதிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது