சிங்கப்பூர் விவகாரம் – இந்தோனேசியாவிடம் கோட்டைவிட்ட இந்தியா: நடந்தது என்ன?

public holiday Singapore 2024

சுற்றுலா பயணிகளின் மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய நாடுகளில் ஒன்று சிங்கப்பூர்.ஏராளமான அழகிய நாடுகள் இருந்தாலும், சிங்கப்பூருக்கு என்று தனி இடம் உள்ளது.

சுற்றிப் பார்க்கவென்றே படைக்கபட்ட சொர்க்க பூமி சிங்கப்பூர். பிரம்மாண்டமான பூங்காவான கார்டன்ஸ் பை தி பே, சென்டோஸா தீவு, சிங்கப்பூரின் ஃபிளையர் (விமானம்) மூலம் நகர்வலம்  செல்லலாம்.

சில்லறை வர்த்தக வளாகமான ஜுவல் சங்கி விமான நிலையம் போன்ற மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய ஏராளமான இடங்கள் சிங்கப்பூரில் உள்ளன.

இதனால் சிங்கப்பூருக்கு பல்வேறு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தினமும் குவிந்து வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், சிங்கப்பூருக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பட்டியலில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது.

இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் 2,19,000 இந்தியர்கள் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்த பட்டியலில் இந்தோனேசியா முதல் இடத்தில் உள்ளது.