சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் சாங்கி விமான நிலையத்திற்கு மிக பெரிய போக்குவரத்து சந்தை “இந்தியா”

Changi Airport stole Woman arrested
Pic: TODAY

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே திட்டமிடப்பட்ட விமான சேவைகளை கடந்த நவம்பர் 29 அன்று மீண்டும் தொடங்குவது சாங்கி விமான மையத்தை மீட்டெடுப்பதில் மிக முக்கியமான வளர்ச்சியாகும் என்று ஆலோசனை நிறுவனமான Sobie Aviationஇன் சுயாதீன விமானப் பகுப்பாய்வாளர் பிரெண்டன் சோபி கூறினார்.

இந்தியா, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) நிறுவனத்திற்கும் சாங்கி விமான நிலையத்திற்கும் மிக பெரிய விமான போக்குவரத்து சந்தையாக இருப்பதே இதற்குக் காரணம் என்றும் அவர் கூறினார்.

வேலையை விட்டு நிற்பதாக கூறிய வெளிநாட்டு பணிப்பெண்ணை தாக்கியவருக்கு அபராதம்

தொற்றுநோய் காலத்தில், சாங்கி விமான நிலையத்தில் அனைத்து முக்கிய சந்தைகளுக்கும் திட்டமிடப்பட்ட சேவைகள் தொடர்ந்து இயக்கப்பட்டாலும், கடந்த ஆண்டு மார்ச்லிருந்து அதாவது 20 மாதங்களுக்கு இந்தியா மீட்பு விமானங்களை மட்டுமே அனுமதித்தது.

மேலும், “சாங்கி மற்றும் SIA நெட்வொர்க்கில் இந்தியா ஒரு பெரிய புள்ளியாக உள்ளது. SIA குழுமம் இந்தியாவிற்கு 21 VTL விமானங்கள் உட்பட 51 வாராந்திர விமானங்களை மீண்டும் விரைவாக தொடங்கியுள்ளது,” என்று திரு சோபி கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான தனிமை இல்லாத பயணம் மீண்டும் இந்த விமான சேவைகள் மூலம் தற்போது மிகவும் சாத்தியமாகியுள்ளது.

சென்னை, டெல்லி மற்றும் மும்பையிலிருந்து தினமும் சிங்கப்பூருக்கு ஆறு நியமிக்கப்பட்ட VTL விமானங்கள் இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட இந்திய ஊழியருக்கு சிறை தண்டனை