இந்தியாவுடனான ஒப்பந்தம் குறித்து தவறான சித்தரிப்பு – பிரதமர் லீ கவலை

(photo: mothership)

பிரதமர் லீ சியன் லூங், சிங்கப்பூர் இந்தியா இடையிலான விரிவான பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாடு குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டதன் மூலம் மக்களிடையே அது தேவையில்லா கவலையை ஏற்படுத்துவிட்டதாக வருத்தம் தெரிவித்தார்.

வேலை, வெளிநாடுகளில் இருந்து வரும் போட்டி, மேலும் வெளிநாட்டினர் இங்கு வேலைசெய்வதும் வசிப்பதுமாக இருப்பது சிங்கப்பூரர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தால் அதற்கான தீர்வை அரசாங்கம் விரைந்து மேற்கொள்ளும் என பிரதமர் அவருடைய முகநூல் பதிவில் வெளியிட்டிருந்தார்.

ஆனால், அதற்கு உடன்பாடு காரணமென்றால் அது தீர்க்கமுடியா சிக்கலில் கொண்டு போய் விடும் என அவர் கூறினார்.

வெளிநாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களால் சிங்கப்பூர் பெரிதும் பலனடைந்து வருவதையும் பிரதமர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.