இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு SHN, Travel History காலம் என்ன? – மேலும் நடப்பில் உள்ளதை அறிவோம்

AP/Rishi Lekhi

Singapore India Flights Travel: தடுப்பூசி பயண ஏற்பாடு என்னும் VTL விமானங்கள் மூலம் இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வருபவர்களுக்கான வழிகாட்டுதலை புதுப்பித்துள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) நிறுவனம் கூறியுள்ளது.

அதாவது, கடைசி 7 நாட்கள் அவர்கள் மேற்கொண்ட பயணம் தொடர்பான தகவல்களை பயணிகள் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த இரு ஊழியர்களை தூக்கிய போலீஸ் – பரபரப்பான விமான நிலையம்!

அவர்கள் கடந்த 7 நாட்களில் எங்கு தங்கி இருந்தார்களோ, அதுவே 7 நாள் பயண தகவலில் கணக்கிடப்படும். முன்னதாக, இது 14 நாட்களாக இருந்தது.

VTL விமானங்கள் வழியாக உள்வரும் பயணிகளுக்கான புதிய வழிகாட்டுதலை பிப்ரவரி 22, 2022 முதல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) மாற்றியது.

SHN தனிமை

அதே போல, SHN தனிமை கால அளவு அனைத்து நாடு அல்லது பிராந்திய வகைகளுக்கும் ஒரே அளவாக ஏழு நாட்களுக்குத் தரப்படுத்தப்பட்டுள்ளது.

VTL மூலம் வரும் பயணிகளுக்கான கூடுதல் மேம்படுத்தப்பட்ட சோதனை முறை நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போதுள்ள வகை 2, 3 மற்றும் 4 ஆகியவை General Travel என்னும் ஒரே பொது பயண வகையாக இணைக்கப்படும்.

கோவிட்-19 பாதிப்பு அதிகரிக்கும் நாடுகள் அல்லது பிராந்தியங்களுக்காக Restricted category என்னும் புதிய கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட வகை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வகையை சேர்ந்த பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கு கடுமையான எல்லை நடவடிக்கைகள் விதிக்கப்படும்.

யாருக்கு தனிமை இல்லை

தடுப்பூசி போடாத மற்றும் தடுப்பூசி போடப்பட்ட “வகை 1” பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் மற்றும் VTL ஏற்பாடுகள் வழியாக வரும் முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கும் தனிமை இருக்காது.

டிராவல் தொடர்பாக உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கமெண்ட் செய்யுங்கள், பதில் தருகிறோம்.

“மதுரை-சிங்கப்பூர்” பயணிகளுக்கு இன்பச்செய்தி – மீண்டும் சேவையை தொடங்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!