சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல VTL பயண அனுமதிக்கான விண்ணப்பங்கள் எப்போது?

(Photo: ET)

சிங்கப்பூர் – இந்தியா இடையிலான தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான VTL சிறப்பு பயணம் வரும் நவம்பர் 29 தொடங்கும் என சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAS) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து வரும் குறுகிய கால வருகையாளர்கள் மற்றும் நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்களுக்கு VTL பயண அனுமதிச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் சிங்கப்பூர் நேரப்படி நாளை (நவம்பர் 22) மாலை 6 மணிக்குத் தொடங்கும்.

ஊழியர்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக 235 மினிபேருந்துகள்: முன்பதிவு செய்ய நிறுவனங்கள் முன்வருமா?

மேலும், VTL மற்றும் VTL அல்லாத விமானங்களுக்கான அட்டவணையை விமான நிறுவனங்கள் தயாரானதும் அறிவிக்கும் என்றும் CAAS தெரிவித்துள்ளது.

VTL திட்டத்தின்கீழ் சிங்கப்பூர் வரும் பயணிகள் வருகையின்போது தனிமை உத்தரவை (SHN) நிறைவேற்ற வேண்டியதில்லை.

அதற்குப் பதிலாக, புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட “நெகடிவ்” சோதனை முடிவை சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் வருகையின்போது PCR சோதனை எடுக்கப்படும்.

நீங்கள் VTL பயண அனுமதிச்சீட்டுக்கான விண்ணப்பங்களை இந்த இணைய தளத்தில் பெறலாம்.

சிங்கப்பூர் – இந்தியா இடையிலான பயணம்: சென்னை உள்ளிட்ட 3 நகரங்களிலிருந்து ஆறு தினசரி விமானங்களுடன் தொடங்கும்!