இந்தியா உள்ளிட்ட 66 தென்கிழக்கு ஆசிய நகரங்களுக்கு விமான சேவை விரிவு – SIA, Scoot அதிரடி அறிவிப்பு

Singapore Airlines Scoot expand service
Photo: Scoot Airlines

Singapore Airlines Scoot India VTL Flights: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் அதன் குறைந்த கட்டண விமான நிறுவனமான Scoot ஆகியவை 27 நாடுகளில் உள்ள 66 நகரங்களுக்கு அதன் சேவைகளை விரிவுப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளன.

அதாவது முழு தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான VTL சேவை வரும் வாரங்களில் விரிவுபடுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

“கையில் ஆயுதத்துடன் யாரையோ தேடிக்கொண்டிருந்த ஆடவர்” – கைது செய்யும்போது போலீஸ் மீது வீசியதால் பரபரப்பு!

இன்று மார்ச் 16 முதல் தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியாவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களுக்கு VTL சேவை படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.

மேலும், ஏதென்ஸ் நகருக்கு புதிய VTL சேவையும் படிப்படியாக அத்துடன் சேர்க்கப்படும் என்று விமான நிறுவனங்களின் தாய் நிறுவனமான SIA குழுமம் தெரிவித்துள்ளது.

மேலும் VTL அல்லாத சேவைகளை வழங்கும் விமானங்கள், சில குறிப்பிட்ட இடங்களுக்கு VTL விமானங்களாக மாற்றப்படும்.

2 வருட கட்டுப்பாட்டிற்கு பின் மகிழ்ச்சி..அதிகாரிகளுடன் ஐலேண்டிற்கு ஜாலி ட்ரிப் – வெளிநாட்டு ஊழியர்கள் நெகிழ்ச்சி!