வீட்டை விட்டு தாண்டாத தாயை சிங்கப்பூர் அழைத்து வந்த இந்திய இளைஞரின் நெகிழ்ச்சியான செயல்!

இந்தியாவில் ஒரு குக்கிராமத்தை சேர்ந்த இளைஞர் தத்தாத்ரே. இவர் தற்போது சிங்கப்பூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிப்புரிந்து வருகிறார். இவரின் தந்தை ஏற்கனவே இறந்து விட்ட நிலையில், தாய் மட்டும் அந்த கிராமத்தில் வசித்து வருகிறார்.

சாங்கி விமான நிலையத்தில் தேவையில்லாமல் வாய்விட்டு மாட்டிக்கொண்டு வெளிநாட்டு ஊழியர் – S$2,000 அபராதம் விதிப்பு

தத்தாத்ரே (Dattatray) சிங்கப்பூரில் பணிபுரிந்து, அங்கேயே வசித்து வந்த நிலையில், வீட்டை விட்டு தாண்டாத, விமானத்தை அருகில் கூடப் பார்க்காத, தனது தாயாரை இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். அத்துடன், சிங்கப்பூரில் தான் பணிபுரிந்து வரும் நிறுவனத்தையும், மெரினா பே, பிரபல உணவகங்கள், பூங்காக்கள், சாங்கி சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று தனது தாயை இன்பதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

இது குறித்து அந்த இளைஞர் சில தினங்களுக்கு முன்பு தனது ‘லிங்கிடுயின்’ (LinkedIn) பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய குறிப்பையும் பதிவிட்டுள்ளார். அதில், முதலில் தனது மனைவியை சிங்கப்பூருக்கு அழைத்து வந்தேன். அடுத்தப் படியாக, வீட்டை விட்டு தாண்டாத, வெளி இடங்களுக்கு எங்கும் செல்லாத, விமானத்தைக் கூடப் பார்க்காத தனது தாயாரை சிங்கப்பூருக்கு அழைத்து வந்திருக்கிறேன். எனது கிராமத்தில் விமானத்தில் பயணித்த இரண்டாவது பெண்மணி தனது தாயார் மற்றும் அவர்களது தலைமுறையில் வெளிநாடுகளுக்கு பயணித்த முதல் பெண்மணி.

BTO வீடுகளின் கட்டுமானப் பணிகள் நிறைவு! – கட்டுமானப் பணிகளுக்கு ஆதரவு வழங்கிய கழகம்..

இந்த தருணத்தில் எனது தந்தை இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார். தாயை அழைத்து வந்தது மறக்க முடியாத, எனது வாழ்வில் மிகப்பெரிய சந்தோசம். எனவே, ஒவ்வொருவரும் தனது தாய், தந்தையரை இது போன்ற வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லுங்கள். அது அவர்களுடைய வாழ்வில் மறக்க முடியாத நாளாக இருக்கும்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

அந்த இளைஞருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதரகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளது.

எனினும், அந்த இளைஞர் இந்தியாவில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதையும், எந்த கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதையும் பதிவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.