சிங்கப்பூரில் சிறைத்தண்டனை பெற்ற இந்தியர்! – ATM கார்டுகளைப் பயன்படுத்தி மோசடி செயல்!

26 வயதான இந்தியர் சிங்கப்பூரில் மூன்று முறை மோசடியில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்ட பிறகு ஒன்பது வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.2018-இல் படிப்பதற்காக பாம்ப்ரி குணால் என்ற இந்தியர் சிங்கப்பூருக்கு வந்துள்ளார்.
அமெரிக்காவில் மூன்று பேரை ஏமாற்றி மோசடி செய்தது சிங்கப்பூரின் வணிக விவகாரத் துறைக்கு 2021-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தெரிய வந்தது.
சிங்கப்பூர் வங்கிக்கணக்கிற்கு அமெரிக்க டாலர்களை பரிமாற்றம் செய்த பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் ஏமாற்றப்பட்டனர்.ராகுல், சிமர் மற்றும் நாயக் இஷா என அடையாளம் காணப்பட்ட மூன்று இந்திய பிரஜைகளுடன் பாம்ப்ரி நட்பாக இருந்ததாக வழக்கறிஞர் கூறினார்.
ராகுலும் சிமரும் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ATM கார்டுகளைப் பயன்படுத்தி உள்ளூர் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க உதவுமாறு பாம்ப்ரியிடம் கேட்டதாக வழக்கறிஞர் கூறினார்.சுமார்,SGD 26,000 க்கும் அதிகமான பணத்தை மற்றவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துள்ளார்.

அவ்வாறு எடுத்த பணத்தை ராகுல், சிமர் மற்றும் நாயக் இஷா ஆகியோருக்கு அனுப்பியுள்ளார்.பாம்ப்ரியின் மென்மையான குணத்தைப் பிறர் தவறாக பயன்படுத்தியுள்ளதாகவும் தனது குற்றங்களுக்கு வருந்துவதாகவும் அவர் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.