காவல்துறையினரிடம் பொய் சொன்ன இந்திய ஊழியருக்கு சிறைத் தண்டனை!

singapore retrenched-workers support
Photo: Changi Airport Official Facebook Page

இந்தியாவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் செல்லத்துரை (வயது 28). இவர் சிங்கப்பூரில் உள்ள ‘ஹைனஸ் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்’ என்ற நிறுவனத்தின் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2022- ஆம் ஆண்டு ஏப்ரல் 16- ஆம் தேதி அன்று லாரியில் ஓட்டுநர் அறையில், ஓட்டுநருடன் ராஜேந்திரன் மற்றும் ஒரு பயணியும், பின்புறத்தில் நான்கு ஊழியர்களும் இருந்துள்ளனர்.

மன்னிப்புக் கேட்டுக் கொண்ட ‘NTUC FairPrice’ நிறுவனம்- காரணம் என்ன தெரியுமா?

அப்போது, லாரியில் இருந்த ஊழியர்களை வேலை இடத்தில் இருந்து தாகூர் லேனுக்கு சென்றுக் கொண்டிருந்தார் இந்தியாவைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான உதயப்பன் வசந்த் (வயது 24). தீவு விரைவுச் சாலைக்குச் செல்லும் யூனோஸ் லிங்க் துணைச் சாலையை நோக்கி செல்லும் பாதையில் சைக்கிளில் சென்றவர் மீது லாரி மோதியது.

விபத்தில் சைக்கிள் ஓட்டி வந்த 64 முதியவர் படுகாயமடைந்தார். அவர் உடனடியாக, ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் உயிரிழந்தார்.

இதனிடையே, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வருவதற்கு முன்பே, லாரியை ஓட்டி வந்த உதயப்பன், ராஜேந்திரனிடம் “நீ லாரி ஓட்டி வந்ததாக காவல்துறையினரிடம் ஒப்புக் கொள்ளுமாறு’ கேட்டுக் கொண்டார். இதற்கு ராஜேந்திரனும் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, ஓட்டுநர் உதயப்பன் அங்கிருந்து சென்று விட்டார்.

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு வஜ்ரங்கி அலங்காரம்!

அதைத் தொடர்ந்து, விபத்து நிகழ்ந்த இடத்திற்கு வந்த காவல்துறையினரிடம் ஓட்டுநரான ராஜேந்திரன், “நான் தான் லாரியை ஓட்டி வந்தேன்” என்று கூற காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

இந்த நிலையில், சைக்கிள் ஓட்டி வந்தவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த தகவலைக் கேட்டு, ஓட்டுநர் ராஜேந்திரன் அதிர்ந்து போனார். உடனடியாக, காவல்துறையினரிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார். ராஜேந்திரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, காவல்துறையினரிடம் அவர் பொய் கூறியதாகவும், உண்மையை மறைத்ததாகவும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.

இதையடுத்து, ராஜேந்திரனுக்கு மூன்று மாதச் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

விபத்து ஏற்படுத்திய உதயப்பன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்துள்ளனர். அவர் ,மீதான வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது.