‘லிஷா’ ஏற்பாடு செய்துள்ள லிட்டில் இந்தியாவின் பாரம்பரிய உணவுப் பயணம் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு!

Photo: Lisha Official Facebook Page

லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமை நிலையம் எனப்படும் ‘லிஷா’ (Little India Shopkeepers and Heritage Association- ‘LISHA’), இந்திய பாரம்பரியத்தை அனைவரும் அறிந்துக் கொள்ளும் வகையிலும், இந்திய பாரம்பரிய உணவுகளைத் தெரிந்துக் கொள்ளும் வகையிலும் ‘லிட்டில் இந்தியாவின் பாரம்பரிய உணவுப் பயணம்’ என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

சிங்கப்பூரில் மூத்த செய்தியாளர் எம்.கே.நாராயணன் காலமானார்!

வரும் ஏப்ரல் 8, 15, 29 ஆகிய தேதிகளில் மாலை 03.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், லிட்டில் இந்தியாவில் ஐந்து பாரம்பரிய உணவகங்கள் கலந்துக் கொள்கின்றனர். இதில், சைவம் மற்றும் அசைவ உணவுகள் பரிமாறப்படும்.

அடித்து துன்புறுத்துறாங்க…. காப்பாத்துங்க ப்ளீஸ்- மலேசியாவில் சிக்கித் தவிக்கும் தமிழர் கண்ணீர் மல்க வேண்டுகோள்!

இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள உள்ளவர்கள் https://iny.sg/…/2023/Indian-Ethnic-Food-Trails/Register என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட சுய விவரங்களைக் குறிப்பிட்டு, 10 சிங்கப்பூர் டாலரைக் கட்டணமாகச் செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.