சிங்கப்பூர் செல்லும் விமானத்தில், பணிப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட இந்தியருக்கு சிறை!

Indian man jailed

விமான பணிப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இந்தியருக்கு 4 மாத சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜயநாதன் கோபால் என்ற பயணி கொச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு ஸ்கூட் நிறுவனத்தின் விமானத்தில் (நவம்பர் 2 2017) பயணமாகியுள்ளார். விமான பயணத்தின் போது 22 வயதான பணிப்பெண்ணிடம் அவர் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

உதவிக்காக இருந்த அழைப்பு மணியை விஜயநாதன் கோபால் அடிக்கடி பயன்படுத்தியதாகவும், இது தொடர்பாக அந்த விமான பணிப்பெண் இனி இது போல மணியை அழுத்த வேண்டாம் என கோரிக்கை வைத்த போது, திடீரென அப்பெண்ணின் முகத்தை தனது கையால் பிடித்து நீ மிகவும் அழகாய் இருக்கிறாய் என கூறியிருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் திடீரென விலகி இது போல நடந்துகொள்ளாதீர்கள் என கூறியுள்ளார். இருப்பினும் அப்பெண்ணின் கையை இழுத்தும், அங்கங்களில் கை வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக விமான நிலையத்தில் அப்பெண் புகார் அளித்த நிலையில் இது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இந்த விவகாரத்தில் தற்போது 4 மாத சிறை தண்டனையை நீதிபதி விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.