சிங்கப்பூர் சட்டத்தை மீறிய இந்திய வம்சாவளி தம்பதிக்கு சிறைத்தண்டனை

(Photo: TODAY)

வீட்டுப் பணிப்பெண்ணை அடித்து துன்புறுத்தியதை அடுத்து, வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்களை வேலைக்கு எடுக்க குடும்பம் ஒன்றிற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், சையது முகமது பீரன் சையத் அமீர் ஹம்சா மற்றும் அவரின் மனைவி மனிதவள அமைச்சகத்தின் (MOM) தடுப்புப்பட்டியலை மீறி புதிதாக ஒரு பணிப்பெண்ணை வரவழைத்தனர்.

குடும்பங்களை பிரிந்து, பல இன்னல்களை கடந்து வாடும் வெளிநாட்டு ஊழியர்கள் – “கவனித்துக்கொள்ள முழு சமூக முயற்சியும் தேவை”

இந்த செயல்களுக்காக, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 17) சையத்க்கு 36 வாரங்கள் அல்லது சுமார் எட்டு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

41 வயதான சிங்கப்பூரர், தடையை மீறியதாகவும், Work pass அனுமதிச் சீட்டைப் பெறுவதற்காக தவறான தகவலைத் தந்ததாகவும் தலா ஒரு குற்றச்சாட்டின்கீழ் விசாரணையின் நடுவே குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

பணிப்பெண்ணின் சம்பளம் முழுவதையும் செலுத்தத் தவறியதற்கான மற்றொரு குற்றச்சாட்டும் பரிசீலிக்கப்பட்டது.

இந்தியாவைச் சேர்ந்த 37 வயது நிரந்தரவாசியான அவரின் மனைவி சபா, இதேபோல் குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் மூன்று நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

2014ஆம் ஆண்டில், சபா அவர்கள் வீட்டுப் பணிப்பெண்ணை தானாக முன்வந்து காயப்படுத்தியதாக மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.

புலம்பெயர்ந்த ஊழியர்களையே அதிகம் சார்ந்துள்ள கட்டுமானம், கடல் துறை – தரத்தை மேம்படுத்த திட்டம்