அதிசயம் கண்டிப்பா நடக்கும் என நம்பி இருக்கும் அக்கா… சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு மரண தண்டனை ரத்தாகுமா?

இந்திய வம்சாவளியை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் நாகேந்திரன் கே. தர்மலிங்கத்தின் தூக்குத் தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு வரும் ஜனவரி 24ஆம் தேதி விசாரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மலேசிய குடியுரிமை கொண்ட நாகேந்திரன் (33) இந்திய தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர், அவரின் மரண தண்டனையை எதிர்த்து நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைகளை தொடங்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு அவர் செய்துள்ளார்.

சிங்கப்பூரில் உங்களுக்கு வங்கி கணக்கு இருக்கா? – வங்கிகள் மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள்

இந்த மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் மற்றும் நீதிபதிகள் ஆண்ட்ரூ பாங், ஜூடித் பிரகாஷ், பெலிண்டா ஆங் மற்றும் சாவ் ஹிக் டின் ஆகியோர் அடங்கிய குழு விசாரிக்க உள்ளது என்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

வக்கீல் எம்.ரவி சார்பில் ஆஜரான நாகேந்திரன், வழக்கமான போதைப்பொருள் கடத்தல்காரராக கருதும் அளவுக்கு அவருக்கு மனநலம் இல்லை என வேண்டுகோள் விடுத்துள்ளார். மனநல மருத்துவர் குழுவால் அவரை மதிப்பீடு செய்யுமாறு அவர் நீதிமன்றத்திடம் கேட்டுள்ளார்.

நாகேந்திரன் கடந்த 2009ஆம் ஆண்டு ஹெராயின் கொண்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டார். அதாவது 42.72 கிராம் ஹெராயின் கடத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவரது தண்டனைக்கு எதிரான அவரது மேல்முறையீடுகள் 2011ஆம் ஆண்டில் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

கிரிமினல் குற்றவாளிகள் போல் அவரை கையாள வேண்டாம் என்றும், அவரின் மரண தண்டனையை கண்டித்து பிரிட்டனின் ‘சேஞ்ச் டாட் காம்’ வலைதளத்தில் அதிகமானோர் கையெழுத்திட்டு விண்ணப்பத்தை சிங்கப்பூர் அரசுக்கு அனுப்பினர்.

அவரின் அக்கா சர்மிளா இது பற்றி முன்னர், நான் ஏதாவது அற்புதம் நடக்கும் என நம்புகிறேன், இறையருளால் அதிசயம் நடக்கும்… என் தம்பி அன்பானவர் என்றும் அவர் கண்ணீர்மல்க கூறினார்.

சில விமான சேவைகளை மாற்றியுள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் – என்ன காரணம் ?