பிழைக்க வந்த இடத்தில் வீண் வேலை – இந்தியருக்கு சிறை தண்டனை

indian-origin-man-jailed stealing
(Photo: Google Maps Street View)

இந்தியாவில் இருந்து உலக நாடுகள் அனைத்திற்கும் சென்ற இந்தியர்கள் அந்நாட்டின் மதிப்பை உயர்த்திய நிலையில், சிலர் அவப்பெயரையும் பெற்று வருகின்றனர்.

சிங்கப்பூரில் நடந்த ஒரு திருட்டு சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது, இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் குளிர்பான கேனை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு 6 வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள கடையில் 3 ‘கேன்’ கோகோ கோலாவைத் திருடியதற்காக அந்த ஊழியருக்கு 6 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“வேலை செய்வது எளிதானது அல்ல, அதன் கஷ்டம் எனக்கு புரியும்” – உணவக ஊழியர்களுக்கு டிப்ஸ் வழங்கிய உணவு விநியோக ஓட்டுநர்!

61 வயதான ஜஸ்விந்தர் சிங் என அடையாளம் சொல்லப்படும் அந்த ஆடவர், திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 26 அன்று புக்கிட் மேரா பப்ளிக் ஹவுசிங் எஸ்டேட்டில் உள்ள ஒரு மினிமார்ட் வழியாக ஜஸ்விந்தர் சிங் சென்றதாகவும், அங்கு அவர் குளிர்சாதன பெட்டியின் கதவைத் திறந்து, பணம் செலுத்தாமல் 3 கோகோ கோலா கேன்களை எடுத்துச் சென்றார் என்றும் கூறப்பட்டுள்ளது.

மறுநாள் காலை கடையை திறந்து பார்த்தபோது, ​​குளிர்சாதன பெட்டியின் கதவு லேசாக திறந்திருப்பதை கடை உரிமையாளரின் மனைவி பார்த்தார்.

இதனை அடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, CCTV காட்சிகளை வைத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

சிங்கப்பூரில் வாரத்துக்கு 4 நாள் வேலையா?? ஊழியர்களின் தேவை அதிகரிக்கும்.. ஆனால் சம்பளம் குறையும் என அச்சம்